அழகிய வரவேற்பு
- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
- மலர்ந்த முகத்துடன் மனைவியைச் சந்தியுங்கள்.
- வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
- நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.
- உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
- தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
- மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
- மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
- நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும்பொழுது மீட்டிப்பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின்பொழுது ஏற்பட்ட...)
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
- நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
- ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, , பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
- வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால்.
- கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
- குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள்.
- அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
- மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
- மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
- ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரை காணச் செல்லும்பொழுது
- மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் .
- அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
- மனைவிக்கு தேவையான நல்ல அறிவுரைகளை கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
- நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
- குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங்கள்.
- நீங்கள் வெளிய+ரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
- முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
- திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
- எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
- பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
- கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும் மாறாக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது)
- அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அவசிய தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும
- அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
- எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
- அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
- மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல்நலக்குறைவோ அல்லது உங்களின் மனைவியின் அனுமதியோ இருந்தால் தவிர).
- அதற்கெனவே உள்ள முன்பக்கத்தின் வழியாக மட்டும் (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது தடுக்கப்பட்டது.
- காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
- அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
- அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
- மாதவிடாய் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது.
- பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
- அவளுக்கு கஷ்டமான கோணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பருமனான ஆளாக இருந்தால் அவளின் நெஞ்சில் முழுமையாக சாய்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி சுவாசத்திற்கு கஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்.
- அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
- படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.
மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல்
- அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
- உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்பு கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
- அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
- பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
hi am bala ur story so good.but ethu oru ponnu kittaerunthu ethirparththu ennaku fist time .unna parka mudiyuma,na epoo thambarathilla than erukan.ennum one year enga tha eruppan .ennaku first expriance tharuviya .contact me smartbala@gmail.com
ReplyDelete